‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ : திமுகவின் 100 நாள் பிரசார திட்டம் அறிவிப்பு

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ : திமுகவின் 100 நாள் பிரசார திட்டம் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டங்களில் பங்கேற்க இயலாதவர்கள், ‘ஸ்டாலின் அணி’ எனும் பிரத்யேக செயலி மற்றும் இணைய தளம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என அறிவிப்பு.

 • Share this:
  உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திமுகவின் 100 நாள் பிரசார திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 29 ஆம் தேதி முதல், 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

  சென்னை கோபாலபுரத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், ஒன்றிணைவோம் வா, விடியலை நோக்கி என்ற பெயரிலான பரப்புரைகளை தொடர்ந்து, வரும் 29ம் ஆம் தேதி முதல் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் பெயரில், 234 தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். இந்த பிரசாரம் திருவண்ணாமலையில் இருந்து தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

  அப்போது, பொதுமக்களிடம் பிரத்யேக படிவம் வழங்கி, அவர்களது குறைகளை அறிந்து அதற்கான நடவடிக்கைகள், தனது தலைமையில் எடுக்கப்படும் எனக் கூறினார்.

  திமுக கூட்டங்களில் பங்கேற்க இயலாதவர்கள், ‘ஸ்டாலின் அணி’ எனும் பிரத்யேக செயலி மற்றும் இணைய தளம் மூலமாகவும், ((www.stalinani.com)) , குறிப்பிட்ட செல்போன் எண் மூலமாக தொடர்பு கொண்டும் பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்கலாம் என்று ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.

  மேலும் படிக்க... EXCLUSIVE: திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது; எந்த சந்தேகமும் வேண்டாம் - மு.க.ஸ்டாலின்

  குடிநீர் பிரச்னை, பட்டா பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு இதன் மூலம் தீர்வு காணப்படும் என்றார். மேலும், சொல்வதை செய்வேன், செய்வதைத் தான் சொல்வான் இந்த ஸ்டாலின் எனவும் அப்போது சூளுரைத்தார். இந்த பிரசாரத்தின்போது நேரிலும், இணையதளம் மூலமும் பிரச்னைகளை கூற அப்போது அழைப்பு  விடுத்தார் ஸ்டாலின்.

  சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, திமுக ஆட்சி அமைத்ததும், 100 நாட்களில் 1 கோடி குடும்பங்களின் பிரச்னைகளை தீர்க்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published: