Home /News /politics /

திருச்சியில் மு.க.ஸ்டாலினுக்கு வந்த மாஸ் கூட்டம்: ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே திரண்ட மக்கள்

திருச்சியில் மு.க.ஸ்டாலினுக்கு வந்த மாஸ் கூட்டம்: ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே திரண்ட மக்கள்

திருச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்

திருச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்

ஸ்டாலினை காண்பதற்கு சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் அலைகடலென மக்கள் வெள்ளம் திர்ணடது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்  தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பிரச்சாரம் செய்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் 9 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரே பிரச்சாரம் செய்தார். ஸ்டாலினை காண்பதற்கு சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் அலைகடலென மக்கள் வெள்ளம் திர்ணடது. அந்த சாலை முழுவதும் மக்கள் கூட்டம் காணமுடிந்தது. வெயிலின் தாக்கத்தால் அங்கு கூடியிருந்த தி.மு.க தொண்டர்கள் கையில் வைத்திருந்த ‘ தி.மு.க-வுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்ற பதாகையை கொண்டு  தலையில் முக்காடு போட்டுக் கொண்டு இருந்தனர்.

பிரசாரத்துக்கு வந்திருந்த  தி.மு.க தொண்டர்கள் ஆபத்தை உணராமல் மொட்டை மாடியின் மேல் நின்று கொடி அசைத்தனர். ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் இடம் அருகிலேயே அரசு போக்குவரத்து கழகம் சார்பாக நேரக் காப்பாளர் அறை உள்ளது. லேசாக உள்ள அந்த மேற்கூரையில் ஆபத்தான முறையில்  இளைஞர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நின்றனர்.

மேலும் புகைப்படக்கலைஞர்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சை பதிவு செய்வதற்காக ஆபத்தை உணராமல் சுட்டெரிக்கும் வெயிலிலும் நின்று ஒளிப்பதிவு செய்தனர்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்தப்பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. அந்த ஆம்புலன்ஸ் செல்லும்பொழுது தி.மு.க தொண்டர்களின் வாகனம் பின்னால் நின்றதால் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் தவித்துக் கொண்டு சென்றது. இதனைக்கண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆம்புலன்ஸுக்கு வழி விடுங்கள் என்று கூறினார். அதன்பின்னரே தொண்டர்கள் வழிவிட தொடங்கினர். பெண்கள் தங்கள்  குழந்தைகளுடன் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஸ்டாலின் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

மு.க.ஸ்டாலின்


வெயிலை பொருட்படுத்தாமல் நின்ற தொண்டர்களுக்கு கொடுப்பதற்காக சிறிய வாகனத்தில் தொப்பிகளை கொண்டுவந்தனர். திமுக தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் முண்டியடித்துக்கொண்டு தொப்பிகளை வாங்கி சென்றனர்.  ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார்.

திமுக தொண்டர்கள் கலைந்து சென்ற பின்னர் அந்தப்பகுதி முழுவதும் செருப்புகளும், தொப்பிகளும் சாலையில் சிதறிக்கிடந்தது. ஸ்டாலின் பிரச்சாரத்தினால் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பழச் சாலை வழியாக வரும் நகரப் பேருந்துகளும் நகரிலிருந்து திருவனைக்காவல் வழியாக வரும் பேருந்துகளும் ஸ்ரீரங்கம் செல்ல முடியாமல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.

செய்தியாளர்: இ.கதிரவன் 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published:

Tags: DMK, DMK Stalin, K.N.Nehru, Lalgudi Constituency, Srirangam Constituency, Thiruverumbur Constituency, TN Assembly Election 2021

அடுத்த செய்தி