பொன் இல்ல அவரு பொய் ராதாகிருஷ்ணன் - கன்னியாகுமரியில் ஸ்டாலின் பிரச்சாரம்

பொன் இல்ல அவரு பொய் ராதாகிருஷ்ணன் - கன்னியாகுமரியில் ஸ்டாலின் பிரச்சாரம்

மு.க.ஸ்டாலின்

தமிழக பா.ஜ.க தலைவர்களில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிறார். இந்த கன்னியாகுமரிக்கு என்ன செய்திருக்கிறார்.

  • Share this:
    கன்னியாகுமரியில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசியவர், ‘ டெல்லி பிரதிநிதின்னு இங்கு ஒருத்தர் இருக்கார். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்தான் தளவாய் சுந்தரம். அவருடைய வேலையே முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் தொழில் ரீதியாக ஒரு பார்ட்னராக இருப்பதுதான். குமரி முதல் கம்போடியா வரை இவருக்கு சொத்து இருக்கிறது. ஜெயலலிதாவால் ஒதிக்கி வைக்கப்பட்டவர் சசிகலாவால் டெல்லி பிரதிநிதியாக பொறுப்பை ஏற்றவர். இப்போ சசிகலாவை விட்டுவிட்டு எடப்பாடி பக்கம் போய்விட்டார். இந்த தேர்தலுக்கு பின்னால் பாருங்கள் அதிமுகவை விட்டுவிட்டு பாஜகவுக்கு போய்விடுவார் அதுதான் நடக்கப்போகிறது.

    கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் இதில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் தான் நம்மை எதிர்த்து களம் காண்கிறார். பொன்.ராதாகிருஷ்ணன் அப்படின்னு சொல்றதவிட பொய் ராதாகிருஷ்ணன் தான் அவரை சொல்ல வேண்டும். என்றார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் ராதாகிருஷ்ணன் குறித்து சத்தமாக ஏதோ ஒன்றை கூறினார். எல்லோரும் சத்தம் போட்டதால் ஸ்டாலினுக்கு ஒன்றும் கேட்கவில்லை.என்ன சொல்றீங்க யாராவது ஒருத்தர் சொன்னாதானே தெளிவாக கேட்கும் என ஸ்டாலின் கூறியதும் கோரஸ் பாடியவர்கள் அமைதியானார்கள்.

    அதன்பின்னர் பொரி உருண்டை என்று சொன்னார்கள். ‘பொரி உருண்டையா ’ பெரிய மனுஷன் அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் பாவம். நான் பொன்.ராதாகிருஷ்ணனை, பொய் ராதாகிருஷ்ணன் என்று சொல்கிறேன் அவ்ளோதான். நீங்க சொல்றதுக்கும் நான் சொல்றதுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

    2014-ல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்தியில் அவர் அமைச்சராகவும் இருந்தார். இந்த கன்னியாகுமரி மாவட்டத்துக்கு எதாவது நன்மை செய்திருக்கிறாரா. இப்போது மீண்டும் தேர்தலில் நிற்கிறார் அவர் தோற்கத்தான் போகிறார் அதில் எந்த சந்தேகமும் இல்லை. தேர்தலின்போது அவர் கொடுத்த எந்த உறுதிமொழியையாவது அவர் அமைச்சராக இருந்த போது நிறைவேற்றியிருக்காரா என்று கேள்வி எழுப்பினார்.

    குளச்சல் வர்த்த துறைமுகம், கன்னியாகுமரி ஸ்மார்ட் சிட்டியாக்கப்படும். தொழில் பூங்கா உருவாக்கப்படும், கன்னியாகுமரியில் விமானநிலையம், இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, போட்டித்தேர்வுக்கான பயிற்சி மையம் இதுல எதையாவது ஒன்றை நிறைவேற்றினாரா. மத்திய அமைச்சராக 5 வருடம் இருந்துள்ளார். பாஜகதான் இப்ப 7 வருடங்களாக ஆட்சியில் உள்ளது. தமிழக பா.ஜ.க தலைவர்களில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிறார்.

    இந்த கன்னியாகுமரிக்கு என்ன செய்திருக்கிறார். அவருக்கு ஓட்டு போடுறதே வேஸ்ட். அவர் இனிமேல் தேர்தலைப் பற்றி சிந்திக்காமல் இருக்க நம்முடைய வேட்பாளர் விஜய்வசந்த் அவர்களுக்கு பெருவாரியான வாக்குகளை வழங்கிடவேண்டும்” என்றார்
    Published by:Ramprasath H
    First published: