ஐபேக் அலுவலகத்துக்கு மு.க.ஸ்டாலின் இரண்டு முறை விசிட் - களநிலவரத்தை நேரில் கண்காணிப்பு

ஐபேக் அலுவலகத்துக்கு மு.க.ஸ்டாலின் இரண்டு முறை விசிட் - களநிலவரத்தை நேரில் கண்காணிப்பு

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் வரக்கூடிய தேர்தல் கள நிலவரங்களை ஸ்டாலின் தொடர்ச்சியாக கண்காணித்து வந்தார்.

 • Share this:
  ஒரே நாளில் இரண்டு முறை ஐ-பேக் அலுவலகத்திற்கு விசிட் அடித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் கள நிலவரங்களை ஐ-பேக் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணித்தார்.

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள i-pac அலுவலகத்திற்கு காலை 11 மணி அளவில் வருகை தந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட முக்கிய ஐபேக் நிறுவன ஊழியர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து நேரடியாக அவ்வப்போது தமிழகம் முழுவதும் வரக்கூடிய தேர்தல் கள நிலவரங்களை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தார்.

  அதனைத் தொடர்ந்து மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணி அளவில் மீண்டும் ஐ பேக் அலுவலகத்திற்கு மீண்டும் வருகை தந்தார். சுமார் 2 மணி நேரம் தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை கண்காணித்து தெரிந்துகொண்டார். இதனிடையே தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: