திமுகவின் ஆட்சியை காண்பதற்காக முதல்வர் பழனிசாமி நீண்ட நாட்கள் வாழ வேண்டும் - மு.க.ஸ்டாலின்

திமுகவின் ஆட்சியை காண்பதற்காக முதல்வர் பழனிசாமி நீண்ட நாட்கள் வாழ வேண்டும் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

திமுகவை வீழ்த்துவதற்காக எடப்பாடி பழனிசாமி உயிரை விட வேண்டாம் என்றும், திமுகவின் ஆட்சியை காண அவர் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் எனவும், மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, காங்கேயத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி அமைந்ததும் நீர் பாசனத்திற்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்றார்.

    திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்துள்ளனர் எனவும், திமுகவை வீழ்த்த இதுவரை ஒருவரும் பிறக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத போதிலும், திமுகவை வீழ்த்த இத்தனை பேர் கூடி இருப்பதே, திமுகவின் பலத்தை உணர்த்துகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். தோல்வி பயத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு முன்பாகவே தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார்.

    BYTE STALIN 1

    ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கச்சேரிமேடு பகுதியில் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கல்வித்துறையை மத்திய அரசு காவித்துறையாக மாற்றி வருவதாக குற்றம்சாட்டினார். ஆசிரியர்கள் பணியிடம், கலந்தாய்வு மூலம் அல்லாமல், பணத்தின் மூலம் நிரப்பப்படுவதாகவும் புகார் தெரிவித்தார். அமைச்சர் செங்கோட்டையனை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பழி வாங்கி வருவதாகவும் ஸ்டாலின் கூறினார்.

    stalin on sengot

    இந்தி திணிப்பை தடுக்கவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
    Published by:Vijay R
    First published: