ஆட்சி முடியும் தருவாயில் 5,000 கோடி ரூபாய் கொள்ளை - அதிமுக அரசு மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின்

வேலுமணி வெளிப்படையாகவும், தங்கமணி சைலண்ட் ஆகவும் ஊழல் செய்வார்கள் என்றும் ஸ்டாலின் சாடினார்.

 • Share this:
  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் 3000 கோடி முதல் 5000 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றிருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

  கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில், கிருஷ்ணகிரி, ஓசூர், வேப்பனஹள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, தளி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், யாரும் நிம்மதியாக இல்லை என்றார். மின்கட்டணம், பால், பெட்ரோல், டீசல் விலை விஷம் போல ஏறியுள்ளதாகவும் ஸ்டாலின் சாடினார்.

  ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ஐ மிரட்டி கே.பி. முனுசாமி பதவி வாங்கிக்கொண்டதாகவும், அவரை 30 சதவிகித முனுசாமி என்று தான், அதிமுகவினர் அழைப்பார்கள் என்றும் கூறினார். வேலுமணி வெளிப்படையாகவும், தங்கமணி சைலண்ட் ஆகவும் ஊழல் செய்வார்கள் என்றும் ஸ்டாலின் சாடினார். ஆட்சி முடியும் தருவாயில் 5000 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

  தொடர்ந்து சாலைகளில் நடந்து சென்ற ஸ்டாலின் அங்கிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருடன் இளைஞர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
  Published by:Vijay R
  First published: