ஈபிஎஸ்-ஓபிஎஸ் நட்பு நடிப்பு - மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஈபிஎஸ்-ஓபிஎஸ் நட்பு நடிப்பு - மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

மு.க.ஸ்டாலின்

திருத்தணியின் தனக்கு வேல் பரிசாக அளிக்கப்பட்டது குறித்து பேசிய ஸ்டாலின், கடவுளை தாங்கள் வெறுக்கவில்லை என்றார்.

 • Share this:
  ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஒன்றாக இருப்பது போல் நடிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தான் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பியவர் எம்.ஜி.ஆர். என்றும் அவர் கூறியுள்ளார்.

  திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை பகுதியில் ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், 1962-ம் ஆண்டு அண்ணா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கேடுகள் போக்கிட திமுகவிற்கு ஆதரவு தாரீர் என்று சொன்னதாகவும், அதையேதான் தானும் தற்போது சொல்வதாகவும் கூறினார். ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்கவும், கொள்ளை அடித்த பணத்தை காக்கவுமே ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஒன்றாக இருப்பது போல நடிப்பதாகக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், ஒரு குட்டிக் கதையையும் சொன்னார்,

  தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்டிய ஸ்டாலின், அரசியலுக்கு வர வேண்டும் என தனக்கு அறிவுரை கூறியது எம்.ஜி.ஆர்.தான் எனவும் தெரிவித்தார். முதலமைச்சர் பழனிசாமி, எப்போதாவது எம்.ஜி.ஆரை பார்த்தது உண்டா எனவும் கேள்வி எழுப்பினார்.  திருத்தணியின் தனக்கு வேல் பரிசாக அளிக்கப்பட்டது குறித்து பேசிய ஸ்டாலின், கடவுளை தாங்கள் வெறுக்கவில்லை என்றார்.

  முன்னதாக பிரசார கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக் கொண்ட ஸ்டாலின், அவற்றை பெட்டியில் இட்டு, சீல்வைத்து பூட்டினார்.
  Published by:Vijay R
  First published: