தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 : குடும்பத்தினருடன் வாக்களித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 : குடும்பத்தினருடன் வாக்களித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

குடும்பத்தினருடன் வருகை தந்த மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  அரசியல் தலைவர்கள் பலர் தங்களது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் SIET கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்ய மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உடன் வருகை தந்தார்.

  இதை தொடர்ந்து பொதுமக்கள் உடன் வரிசையில் காத்திருந்த மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து துர்கா ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். மு.க.ஸ்டாலின் வாக்குப்பதிவு செய்வதற்கு முன் தலைவர்களின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
  Published by:Vijay R
  First published: