• HOME
 • »
 • NEWS
 • »
 • politics
 • »
 • தி.மு.க தான் பா.ஜ.க-வோட மெயின் டீமே - சீமானின் காரசார பதில்கள்

தி.மு.க தான் பா.ஜ.க-வோட மெயின் டீமே - சீமானின் காரசார பதில்கள்

Youtube Video

ஒன்றுமே இல்லாத பா.ஜ.கவை ஒன்றாக்கியது யார். சிறந்த தலைவர் நல்லகண்ணு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக அவரை தோற்கடித்தது யார்?. ஹெச்.ராஜாவை காரைக்குடியில் நிறுத்தி முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக அவரை உள்ளே அழைத்து சென்றது யார். ஆர்.எஸ்.எஸ்-காக முரசொலியில் கடிதம் எழுதியது யார்.

 • Share this:
  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் நியூஸ் 18 தமிழ்நாடு நடத்திய சிறப்பு நேர்காணலின் சில கேள்விகளும் பதில்களும் உங்கள் பார்வைக்கு.

  கேள்வி:  சீமான் பா.ஜ.கவின் பி டீமா?

  பதில்: இது பைத்தியக்காரர்களின் புலம்பல். நான் கட்சி ஆரம்பித்தது எப்போது என உங்களுக்கு தெரியும். அப்போது பாஜக ஆட்சியில் இருந்தததா. நான் யாரை எதிர்த்து வந்தேன். நான் எதற்காக போராடி ஓராண்டு சிறைக்கு சென்றேன். என்ன சூழலில் நான் இயக்கத்தை தொடங்கினேன் என தெரிந்தும் சும்மா பாஜக B டீன் என பேசுவதா. இப்போது அதிமுக ஆட்சியில் இருக்கிறது. ஒன்றுமே இல்லாத பா.ஜ.கவை ஒன்றாக்கியது யார். சிறந்த தலைவர் நல்லகண்ணு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக அவரை தோற்கடித்தது யார்?. ஹெச்.ராஜாவை காரைக்குடியில் நிறுத்தி முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக அவரை உள்ளே அழைத்து சென்றது யார். ஆர்.எஸ்.எஸ்-காக முரசொலியில் கடிதம் எழுதியது யார். ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் போது வாழ்த்து சொன்னது நானா ஸ்டாலினா. என் கட்சியில் 90 சதவிகிதம் இந்துக்கள் இருக்கிறார்கள் என நானா கூறுகிறேன்.எந்த காலத்திலும் காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க, தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை என்று நான் சொல்கிறேன் நீங்கள் சொல்லுங்களேன். காங்கிரஸ் என் இனத்தின் எதிரி. பாரதிய ஜனதா மனித குலத்தின் எதிரி என்று நான் பேசுகிறேன்.



  கேள்வி: பாஜகவால் உருவாக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வரவிடாமல் அதிமுக, திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க உருவாக்கப்பட்டவர் சீமான் என உங்களுடன் பயணித்தவர்களே பொதுமேடையில் பேசுகிறார்களே?

  பதில்: அவர்களால் வேறு என்ன பேச முடியும். எங்க அண்ணன் ரொம்ப உறுதியானவர். பாஜகவுக்கு போகமாட்டார் என்று பேசமுடியுமா என்ன. நீங்க சொன்ன மாதிரி பேசுவதற்கு தானே அவர் அங்கே போயிருக்கார். தி.மு.க வாக்குகளை நான் பிரித்துவிடுவேன் என்றால். தி.மு.க அவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.

  கேள்வி: வாஜ்பாஜ் தலைமையிலான பா.ஜ.க வேறு? மோடி தலைமையிலான பா.ஜ.க வேறு என்ற ஸ்டாலின் விளக்கம் பற்றி..

  பதில்: அவரை விளக்கம் சொல்ல சொல்லுங்கள் என்ன வேறு என்று. நீங்க வேறுன்னு வார்த்தையில சொல்றீங்க. எந்த அளவுல வேறுபடுது. நீங்கள் உங்கள் சந்தர்ப்பத்துக்காக எதையாவது பேசிக்கொண்டிருக்கக்கூடாது. மதவாத சக்தி, மதவாத சக்தின்னு பா.ஜ.கவை கூறுகிறீர்கள். இங்கே பா.ஜ.க எங்கே இருக்கிறது. இல்லாத எதிரிக்கு எதுக்கு ஊரை திரட்டிக்கொண்டு சண்டை போடப்போகிறீர்கள்.

   

  கேள்வி: பாஜகவின் கைப்பாவையாக அ.தி.மு.க இருக்கிறது என்ற குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்..

  பதில்: முதன்முதலாக சட்டமன்றத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்துக்கு பாஜகவை கூட்டணி வைத்து அழைத்துச்சென்றது யார். இப்போது வந்து புனிதர் வேடம் போடுகிறீர்கள். எதையாவது சொல்ல வேண்டும் என பி டீம் , பி டீம் என்று என்னை சொல்வேண்டியது. மெயின் டீமே திமுகதான். தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க-வை தி.மு.க அனுசரிக்குமா இல்லையா. பா.ஜ.கவை அனுசரிக்க மாட்டோம் எதிர்த்து சண்டைபோடுவோமுன்னு தலைவரை ஒரு தடவை சொல்ல சொல்லுங்க பார்ப்போம். பிரசாந்த் கிஷோரை வைத்துக்கொண்டு பா.ஜ.கவை எதிர்ப்பேன் என்று கூறுவது வேடிக்கையாக இல்லையா. தமிழக அரசு பா.ஜ.கவின் கைப்பாவையாக இருப்பது உண்மைதானே. அவர்கள் ஒவ்வொரு நாளும் சமரசம் செய்துக்கொண்டு தான் நகர்கிறார்கள். ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதால் மத்திய அரசுக்கு இணக்கமாக செல்கிறார்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: