கரூர் சட்டப்பேரவை தொகுதியில் நூதன பிரச்சாரத்தை தொடங்கிய திமுக நிர்வாகி செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

பெண்கள் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் பணியை அவர் தொடங்கி உள்ளார்.

 • Share this:
  கரூர் சட்டப்பேரவை தொகுதியல் நூதன பிரச்சாரத்தை திமுக நிர்வாகி செந்தில் பாலாஜி தொடங்கி உள்ளார்.

  தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான் என உள்ளிட்ட பலர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  இந்நிலையில் திமுக நிர்வாகி செந்தில்பாலாஜி கரூர் சட்டப்பேரவை தொகுதியில் நூதன பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் கோவிலில் சாமி கும்பிட்டு பிரச்சாரத்தை திடீரென தொடங்கி உள்ளார். பெண்கள் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் பணியை அவர் தொடங்கி உள்ளார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே அவர் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்.

  பெண்களிடம் வாக்கு சேகரித்த செந்தில் பாலாஜி பேசுகையில், தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதியிலும் மாபெரும் வெற்றி பெறும். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக தலைவர் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவோம் .உள்ளம் தோறும் உதயசூரியன் இல்லம் தோறும் என தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
  Published by:Vijay R
  First published: