திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து கே.எஸ்.அழகிரி விளக்கம்

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து கே.எஸ்.அழகிரி விளக்கம்

கே.எஸ்.அழகிரி மு.க.ஸ்டாலின்

சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, பேச்சுவார்த்தை வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் செல்வதாகக் கூறினார்.

 • Share this:
  தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறதென்றும் இரண்டொரு நாளில் முடிவாகும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் கே.எஸ்.அழகிரியும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

  சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, பேச்சுவார்த்தை வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் செல்வதாகக் கூறினார். தொடர்ந்து நாளையோ நாளை மறுநாளோ பேச்சுவார்த்தை தொடரும் என அவர் தெரிவித்தார்.

  இதையடுத்து மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.
  Published by:Vijay R
  First published: