பெண்கள் குறித்து லியோனி பேசிய கருத்துக்காக மன்னிப்பு கேட்ட திமுக வேட்பாளர் காரத்திகேய சிவசேனாதிபதி

கார்த்திகேய சிவசோனதிபதி

திண்டுக்கல் லியோனி பெண்கள் பற்றி பேசிய கருத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசோனதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கோவை மற்றும் வடக்கு கோவை பகுதிகளில் தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் காரத்திகேய சிவசேனாதிபதி தேர்தல் பரப்புரையாற்றினார். அப்போது, எஸ்.பி.வேலுமணி செய்த ஊழலைப் பற்றி பேசுவது தனிமனித தாக்குதல் அல்ல. எஸ்.பி.வேலுமணி தான் என் மீது தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறார். தமிழ் சமூகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் ஆபத்தானவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி .

  தொண்டாமுத்தூர் தொகுதி தொடர்பாக வேலுமணி உடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன். தோல்வி பயத்தில் எஸ்.பி வேலுமணி தனிமனித தாக்குதல், புரளிகளை பரப்பிக் கொண்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியை விட எஸ்.பி வேலுமணி அதிகமாக கொள்ளையடித்துள்ளார். பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் பலமாக எஸ்.பி வேலுமணி உள்ளார் என்றார்.

  மேலும் திண்டுக்கல் லியோனி பெண்கள் பற்றி பேசிய கருத்து வருத்ததிற்கு உரியது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளார். கடந்த ஒரிரு நாட்களுக்கு முன் தொண்டமுத்தூர் தொகுதியில் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  அப்போது வெளிநாட்டு பசுக்களின் பாலைக் குடித்துக் குடித்து பெண்களின் இடுப்பு பெருத்துப் போய் பேரல் போல் ஆகிவிட்டது என்று பேசியது சர்ச்சையாகியுள்ளது. லியோனியின் கருத்து பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திருந்த நிலையில் அதற்காக கார்த்திகேய சிவசேனாதிபதி தற்போது மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
  Published by:Vijay R
  First published: