குக்கர் வயிற்றை நிரப்பும்.. முரசு உங்கள் மனதை நிரப்பும் - திருச்சியில் விஜய பிரபாகரன் பேச்சு

குக்கர் வயிற்றை நிரப்பும்.. முரசு உங்கள் மனதை நிரப்பும் -  திருச்சியில் விஜய பிரபாகரன் பேச்சு

விஜயபிரபாகரன்

100க்கும், சோறுக்கும், பீர்க்கும் உங்கள் ஓட்டு போனால் அந்த கடவுளே வந்தாலும் இந்த மக்களை காப்பாற்ற முடியாது என விஜயபிரபாகரன் பேசியுள்ளார்.

  • Share this:
திருச்சி தாராநல்லூர் பகுதியில் கிழக்கு சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஆர்.மனோகரனை ஆதரித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் காந்தி மார்க்கெட் அருகே திரண்டிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய் பிரபாகரன், ‘தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவை, அதற்கு இந்த கூட்டணிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அ.ம.மு.க - தே.மு.தி.க தொண்டர்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்க்கையில் 2011ல் அ.தி.மு.க -தே.மு.தி.க கூட்டணி வைத்து வெற்றி பெற்றதைப் போன்று, தற்போதும் இக்கூட்டணி நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தான் உள்ளனர் என்பது தெரிகிறது.

அ.ம.மு.க - தே.மு.தி.க இபிஎஸ் ஓபிஎஸ் துரோகத்தால் அகற்றப்பட்ட கட்சி இது, அதனால் இணைந்து மக்களுக்காக குரல் கொடுக்க வந்துள்ளோம். தற்போது இலவசம் என்று கூறுபவர்கள் கொரோனா காலத்தில் அந்த இலவசங்களை வழங்கவில்லை, அப்போது மக்கள் தேவைப்படவில்லை அதனால் கண்டுகொள்ளவில்லை, இப்போது ஓட்டுக்காக இலவசம் என்று அறிவித்து விலைக்கு வாங்க குருட்டு நம்பிக்கையில் இரண்டு கட்சியினரும் பார்க்கிறார்கள்.

டிடிவி அண்ணன் மற்றும் கேப்டன் பணத்தை சம்பாதிக்கவில்லை, மக்கள் மனதை சம்பாதித்ததால் தான் இன்று இருவரும் மக்கள் மனதை நம்பி கூட்டணி அமைத்துள்ளனர். 2011ல் அண்ணன் மனோகரன் கேப்டன் அவர்களுடன் சட்டசபைக்கு சென்றது போல, 2021ல் லேடி கேப்டனுடன் சேர்ந்து சட்டசபைக்கு கண்டிப்பாக செல்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது இளைஞர்கள் மத்தியில் அரசியல் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது, நல்ல தலைவர்களுக்கும், திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருப்பார்கள்.100க்கும், சோறுக்கும், பீர்க்கும் உங்கள் ஓட்டு போனால் அந்த கடவுளே வந்தாலும் இந்த மக்களை காப்பாற்ற முடியாது.... எனவே அனைவரும் சிந்திக்க வேண்டும்.

எனது அப்பாவின் கனவான உங்கள் அனைவரையும் தங்கத்தட்டில் வைத்து தாலாட்ட வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற நான் வந்துள்ளேன். அதற்காகவே ஜாதி, மத, மொழி, இனத்திற்கு அப்பாற்பட்டு இந்த கூட்டணியை அமைத்துள்ளோம்.
சமூக வலைதளங்கள் அனைத்தும் பொழுதுபோக்கு மட்டுமே, அதனை தொடர்ந்தால் வாழ்க்கை சீரழியும்.
என்னை உங்களது சகோதரனாக பாவித்து உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள என் உதவி தேவைப்பட்டால் நிச்சயம் உதவுகிறேன்.

லிப்ட் போல தே.மு.தி.க- அ.ம.மு.க என்றும் இருக்கும். அதேபோல இத்தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மனோகரன் அவர்கள் நிறைவேற்றுவார், குக்கர் உங்களது வயிறை நிரப்பும் முரசு உங்கள் மனதை நிரப்பும். என்று கூறி குக்கர் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

செய்தியாளர்: கதிரவன்
Published by:Ramprasath H
First published: