அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய முடிவை தேமுதிக மறுபரீசிலனை செய்ய வேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய முடிவை தேமுதிக மறுபரீசிலனை செய்ய வேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்

வானதி சீனிவாசன்

நாங்கள் நிற்கின்ற அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் எங்கள் கூட்டணி அரசு ஆட்சியமைக்க வேண்டும்.

  • Share this:
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியிருப்பது வருத்தமளிக்கிறது என்றும் இந்த முடிவினை அவர்கள் மறுபரீசலனை செய்ய வேண்டுமென்று பாஜக மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை கோயம்பேடு பாஜக தேர்தல் அலுவலகத்தில் வானதி சீனிவாசன் பேட்டியளித்தார். அப்போது, திமுக கூட்டணி வெற்றி என கருத்து கணிப்புகள் வருகிறது. கருத்து கணிப்புகளை ஒரளவிற்குத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். பாஜக கூட்டணிதான் வெற்றி பெரும் எனவும் சில நிறுவனங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளன.

தேமுதிக முடிவு வருத்தமளிக்கிறது அவர்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். அதிமுகவும் இதனை பேசி தேமுதிக-வை வெளியே செல்லாமல் செய்யவேண்டும். ஒவ்வொரு கட்சிகளும் அவர்களுக்கு பலமுள்ள கட்சிகள் அவர்களுக்கான தொகுதி கேட்பது சகஜம் தான். நாங்கள் நிற்கின்ற அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் எங்கள் கூட்டணி அரசு ஆட்சியமைக்க வேண்டும்.

தொகுதிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது ஒரிரு நாட்களில் வெளியாகும். கருத்துகணிப்புகளை முழுமையாக எடுத்துக்கொள்ள முடியாது. குறுகிய காலத்தில் தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் சிறந்த மாநிலம் தான்இதில் அரசுக்கு மட்டுமல்ல நமக்கும் பொறுப்புள்ளது என்றார்.
Published by:Vijay R
First published: