நிறைகளும் பல குறைகளும் இணைந்த ஆட்சி - அதிமுக அரசு பற்றி பிரேமலதா விஜயகாந்த் கருத்து

நிறைகளும், பல குறைகளும் இணைந்த ஆட்சி அதிமுக என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

நிறைகளும் பல குறைகளும் இணைந்த ஆட்சி - அதிமுக அரசு பற்றி பிரேமலதா விஜயகாந்த் கருத்து
பிரேமலதா விஜயகாந்த்
  • Share this:
கொரோனா தொற்றால் இதுவரை முடங்கிக் கிடந்த அரசியல் கட்சிகள், தற்போது அடுத்த தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க, கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், தேமுதிக தனித்து போட்டியிடவே தொண்டர்கள் விரும்புவதாக சில தினங்களுக்கு முன் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறியதையடுத்து, அதிமுக தலைமையிலான கூட்டணி நீடிக்குமா என்ற விவாதம் சூடுபிடித்தது.Also read: வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலரின் குடும்பத்திற்கு ₹ 86.5 லட்சம் நிதி வழங்கிய சக காவலர்கள்


இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்பு சொன்ன கருத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில், தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், தனித்து போட்டியிட வேண்டுமென விரும்புவதாகவும், தனித்து போட்டியா அல்லது கூட்டணியா என்பதை ஜனவரி மாதத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று கூறினார்.

மத்திய அரசின் செயல்பாடுகள் போதுமான அளவு இல்லையென்றும் என்று கூறியுள்ள பிரேமலதா, நிறைகளும் பல குறைகளும் இணைந்த ஆட்சி அதிமுக என்று தெரிவித்தார்.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading