ஹோம் /நியூஸ் /அரசியல் /

ராஜ்ய சபா சீட் கட்டாயம் வேண்டும்; அதிமுகவிடம் தேமுதிக கறார்?

ராஜ்ய சபா சீட் கட்டாயம் வேண்டும்; அதிமுகவிடம் தேமுதிக கறார்?

விஜயகாந்த்

விஜயகாந்த்

இந்த முறை கட்டாயம்  ராஜ்ய சபா சீட் வேண்டும் என அதிமுகவிடம் தேமுதிக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. குறிப்பாக கூட்டணியில் தேமுதிகவுக்கு 9 இடங்கள் ஒதுக்க வேண்டும், ராஜ்ய சபா இடம் வழங்க வேண்டும்,வாரிய பதிவிகளை வழங்க வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது தேமுதிக .

ஆனால் அதே கோரிக்கையை முன் வைத்து பேச்சு வார்த்தை நடத்திய பாட்டாளி மக்கள் கட்சி, அவர்கள் கேட்டதை போல 7 இடங்கள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என கூட்டணியில் இரண்டாம் கட்ட பெரிய கட்சியாக வலுப்பெற்றது.ஏற்கனவே பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்த தேமுதிக கட்டாயம் பாமகவை விட கூடுதல் இடம் வேண்டும் என கோரிக்கை வைத்தது.

கடைசிநேரத்தில் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து பின்னர் அந்த செய்தி ஊடகங்கள் மூலம் வெளியாகிய நிலையில், கடைசியில் வேறு வழி இல்லாமல் அதிமுக கூட்டணியில் 4 நாடாளுமன்ற தொகுதிகளை பெற்றது.

தற்போது அதிமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிக முடிவு செய்தாலும் இந்த முறை கட்டாயம் ராஜ்ய சபா இடம் வேண்டும் என்ற முதல் கோரிக்கையை முன்வைத்து பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. எனவே அதற்கு சம்மதம் தெரிவித்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து பேசலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: AIADMK, DMDK