மாவட்ட செயலாளர்களுடன் நாளை அவசர ஆலோசனை கூட்டம் - தேமுதிக அழைப்பு

மாவட்ட செயலாளர்களுடன் நாளை அவசர ஆலோசனை கூட்டம் - தேமுதிக அழைப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • Share this:
  அதிமுக உடனான தொகுதி பங்கீடு இழுபறி நீடிக்கும் நிலையில் நாளை மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிக அழைப்பு விடுத்துள்ளது.

  தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக - தேமுதிக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக உள்ளது. முதல்கட்ட பேச்சுவார்த்தையில் 40 சீட்கள் வரை தேமுதிக கேட்ட நிலையில் தற்போது பாமக, பாஜக கட்சிகளுக்கு இணையாக தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

  அதிமுக தரப்பில் 15 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் நாளை மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிக அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள கடிதத்தில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நாளை (மார்ச் 09) காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து இந்ந கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Vijay R
  First published: