அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வதில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு - தகவல்

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

சட்டமன்ற தேர்தலில் குறிபிட்ட சில தொகுதிகளில் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் கொடுப்பது தொடர்பாக அவர்களுக்கு கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

 • Share this:
  சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இதற்கான சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே கலந்து கொண்டு கேக் வெட்டி நிகழ்ச்சியை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை.

  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாமல் இருந்தற்கு ஓ.பன்னீர்செல்வம் உடனான கருத்து வேறுபாடு என்று தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் குறிபிட்ட சில தொகுதிகளில் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் கொடுப்பது தொடர்பாக அவர்களுக்கு கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.  அதிமுக சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொள்ளாமலர் மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உடன் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் குழப்பமான சூழல் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
  Published by:Vijay R
  First published: