மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வார்கள்! - வேட்புமனுத்தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வார்கள்! - வேட்புமனுத்தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

போடி சட்டமன்றம் தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்த துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், 2 முறை வெற்றிபெறச் செய்த போடி தொகுதி மக்கள் தன்னை மீண்டும் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வார்கள் என தெரிவித்தார்.

 • Share this:
  போடி சட்டமன்றம் தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்த துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், 2 முறை வெற்றிபெறச் செய்த போடி தொகுதி மக்கள் தன்னை மீண்டும் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வார்கள் என தெரிவித்தார்.

  தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளைத் தவிர மார்ச் 19-ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம் என்பதால் ராகுகாலம் முடிந்து நல்ல நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், `` போடி தொகுதி மக்கள் தன்னை மீண்டும் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வார்கள்” என தெரிவித்துள்ளார்.

  அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் 178 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதன் ஒரு பகுதியாக ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழப்பாடி பேருந்து நிலையத்தில் மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார். அப்போது அதிமுக எம்.எல்.ஏ சித்ராவை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார். தொடர்ந்து கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் அதிமுக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து பேசுகிறார். அதன்பின்னர் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்தும் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
  Published by:Ram Sankar
  First published: