தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலன் அடிப்படையிலே எனது முடிவு இருக்கும் - துணை முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற சர்ச்சை அதிமுகவில் எழுந்துள்ள நிலையில் முதல்வர்-ஆளுநர் சந்திப்பு கூடுதல் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலன் அடிப்படையிலே எனது முடிவு இருக்கும் - துணை முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
  • Share this:
தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளதாகவும்,  இனியும் அவ்வாறே இருக்கும் என்றும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

நாளை மறுநாள் (7-ஆம் தேதி) முதல்வர் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் திடீர் அறிவிப்பு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! என்று தெரிவித்துள்ளார்.



வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பான அறிக்கையும் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற சர்ச்சை அதிமுகவில் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு கூடுதல் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: October 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading