பெண்களை இழிவுபடுத்தி விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது - கனிமொழி ட்வீட்

எம்.பி., கனிமொழி கருணாநிதி

பெண்கள் குறித்து லியோனி பேசியது கடும் சர்ச்சைக்குள்ளாகியது. இதனை கையில் எடுத்த பா.ஜ.க தரப்பு திமுகவுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

  • Share this:
    தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் லியோனி பெண்கள் குறித்து பேசிய கருத்து கடும் சர்ச்சைக்குள்ளாகியது. கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் திண்டுக்கல் லியோனி.

    தொண்டாமுத்தூர் வேட்பாளராக களமிறங்கியுள்ள கார்த்திகேய சிவசேனாதிபதி நாட்டு மாடுகளை காப்பாற்றும் விதமாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தில் பேசிய லியோனி . “ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருக்கும். பிள்ளைய தூக்கி இடுப்புல வச்சா உட்கார்ந்து கொள்ளும். பாரின் மாடு ஒரு மணி நேரத்துல 40 லிட்டர் பால் கறக்கும், ஆனால் அதைக் குடிச்சோம்னா பெரிசா ஊதிப்போக வேண்டியதுதான். 8 மாதிரி இருந்த பெண்கள் இடுப்பு இன்று பேரல் மாதிரி ஆகிடுச்சு. தாய்ப்பாலுக்கு அடுத்து சுத்தமான பால் நம்ம நாட்டு மாடு பால்தான். அந்த நாட்டு மாடுகளை காப்பாற்ற மாபெரும் இயக்கம் நடத்தியர்வர்தான் கார்த்தி சிவசேனாதிபதி” என்றார்.

    பெண்கள் குறித்து லியோனி பேசியது கடும் சர்ச்சைக்குள்ளாகியது. இதனை கையில் எடுத்த பா.ஜ.க தரப்பு திமுகவுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்துள்ளது. பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் தன் ட்விட்டரில் ‘இத்தகைய ஆணாதிக்க மனோபாவ நபர்கள் குறித்து கனிமொழி என்ன கூற விரும்புகிறார்? இதுதான் உங்கள் கட்சி பெண்கள் மீது வைத்திருக்கும் மரியாதையா?” என்று சாடியுள்ளார்

    இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கனிமொழி, “அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்” எனப் பதிவிட்டுள்ளார்.

     
    Published by:Ramprasath H
    First published: