பெரியார் குறித்து சர்ச்சை ட்வீட்.. பாஜக நடவடிக்கை எடுக்கும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

பெரியார் குறித்து சர்ச்சை ட்வீட்..  பாஜக நடவடிக்கை எடுக்கும்: சி.பி.ராதாகிருஷ்ணன்
  • News18
  • Last Updated: December 25, 2019, 11:57 AM IST
  • Share this:
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை ட்விட்டரில் பதிவிட்டது தொடர்பாக  பா.ஜ. கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று பெரியார் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.  பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த ட்வீட்டுக்கு கண்டனங்கள் எழவே நீக்கப்பட்டது. பாஜகவின் பதிவுக்கு அமைச்சர் ஜெயக்குமார், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இறந்தவர்களை விமர்சனம் செய்யும் பண்பாடு பா.ஜ.க.விற்கு கிடையாது என்றும், சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவு குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.


மேலும் படிக்க: பெரியார் குறித்து பாஜகவின் சர்ச்சை ட்வீட்... அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

 
First published: December 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading