வாக்குச்சாவடி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை!

முகவர்கள்

சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னையை பொருத்தவரை மொத்தமுள்ள 16 தொகுதிகளுக்கு 3 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

  14 மேஜைகளுக்கு 14 முகவர்கள், ஒரு தலைமை முகவர், தபால் வாக்குகளுக்கு ஒரு முகவர் என மொத்தம் 16 முகவர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.

  ஒவ்வொரு வேட்பாளருக்கும் 4 மாற்று முகவர்கள் நியமிக்கலாம். வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளே 16 முகவர்களும் வெளியில் 4 மாற்று முகவர்கள் அனுமதிக்கப்படுவர். மாற்று முகவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

  தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து  காணப்படும் நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு 72 மணி நேரம் முன்னதாக முகவர்கள் கோவிட் பரிசோதனை மேற்கொண்டு இருக்க வேண்டும் அல்லது முதற்கட்ட தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

  அதன்படி சென்னையில் உள்ள 15 மண்டல அலுவலகங்களிலும் முகவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் தியாகராய நகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: