திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அதிமுக அமைச்சர்களுக்கு சிறை - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

மு.க.ஸ்டாலின்

அமைச்சர்கள் தொடர்பான ஊழல் புகார்களை ஆளுநரிடன் துணிந்து வழங்கும் வகையில் உண்மையான தகவல்களை திரட்டிக்கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

 • Share this:
  திமுக ஆட்சிக்கு வந்ததும், ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக அமைச்சர்களை சிறைக்கு அனுப்புவோம் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில், திமுக சட்டப் பிரிவு சார்பில் மாநாடு மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மைதானத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மாதிரி நுழைவாயில் முகப்பு அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அக்கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, வில்சன், இளங்கோ உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

  இறுதியாக சிறப்புரை ஆற்றிய மு.க.ஸ்டாலின், ஆளும் கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று வெற்றிபெற்றதில் திமுக வழக்கறிஞர்களின் பங்கு முக்கியமானது என்று குறிப்பிட்டார். அத்துடன், தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் தொடர்பான ஊழல் புகார்களை ஆளுநரிடன் துணிந்து வழங்கும் வகையில் உண்மையான தகவல்களை திரட்டிக்கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

  மேலும், ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் திமுக ஆட்சிக்கு வந்ததும், ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: