கொரோனாவை யாருக்கும் தர மாட்டோம், யாரிடம் இருந்தும் பெற மாட்டோம் என மக்கள் உறுதியேற்க வேண்டும்:ஸ்டாலின் வலியுறுத்தல்!

முதல்வர் வேண்டுகோள்

தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்களில் அறிவிக்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்தி மக்கள் வெளியில் சுற்றித் திரிந்ததால்தான் தற்போது தளர்வுகள் அல்ல முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா தொற்றை யாருக்கும் தர மாட்டோம் யாரிடம் இருந்தும் பெற மாட்டோம் என பொதுமக்கள் உறுதியேற்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  தமிழகத்தில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் போன்றவை கூட செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், முழு  ஊரடங்கு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,  புதிய அரசு பதவியேற்ற 2 வார காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், கொரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000,   பெண்களுக்கு  அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க நடவடிக்கை, ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3  குறைப்பு, ஸ்டெர்லைட்  துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, போராட்டக்காரர்கள் மீதான வழக்கு வாபஸ் உட்பட பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டுள்ளார்.

  இவற்றையெல்லாம் விட மேலாக கொரோனா தடுப்பு பணிக்காக கடந்த 2 வாரத்தில் மருத்துவமனைகளில் புதிதாக 17 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளனம் 30 இயற்கை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.  புதிதாக 2,100 மருத்துவர்களும்  6,000 செவிலியர்களும் நியமிக்கப்படவுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்களில் அறிவிக்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்தி மக்கள் வெளியில் சுற்றித் திரிந்ததால்தான் தற்போது தளர்வுகள் அல்ல முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள  முதலமைச்சர் ஸ்டாலின்,  கொரோனா  சங்கிலியை உடைக்க  முழு ஊரடங்கை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.

  எனவே, கொரோனா தொற்றை யாருக்கும் தர மாட்டோம் யாரிடம் இருந்தும் பெற மாட்டோம் என பொதுமக்கள் உறுதியேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்,  ஊரடங்கு என்பது கசப்பு மருந்து என்றபோதிலும் மக்கள் அதை அருந்தியே ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: