திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னையில் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கேரளா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி நேற்று மாலை சென்னை வந்தார்.
அதன்பிறகு சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உம்மன்சாண்டி, ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில், தி.மு.க., சார்பில் துரைமுருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் உம்மன்சாண்டி, ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், தேர்தலில் திமுக-வுக்கு ஆலோசனை வழங்கி வரும் ஐ-பேக் நிறுவன ஊழியர்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐ-பேக் அலுவலகத்தில் 15 நிமிடங்களுக்கு இந்த ஆலோசனை நடைபெற்றது. அதன்பின்னர், அந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளான பிரசாந்த் கிஷோர், ரிஷி உள்ளிட்டோருடன் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
Must Read : கேரளாவில் மீனவர்களுடன் சேர்ந்து நடுக் கடலில் குதித்து குளித்து மகிழ்ந்த ராகுல் காந்தி - வைரல் புகைப்படங்கள்