பத்ருதீன் அஜ்மல் மடியில் அமர்ந்து கொண்டு மதச்சார்பின்மை பேச காங்கிரஸுக்கு வெட்கமாக இல்லை?- அமித் ஷா ஆவேசம்

பத்ருதீன் அஜ்மல் மடியில் அமர்ந்து கொண்டு மதச்சார்பின்மை பேச காங்கிரஸுக்கு வெட்கமாக இல்லை?- அமித் ஷா ஆவேசம்

அமித்ஷா

இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வெளிநாட்டிலிருந்து ஊடுருவல் அதிகமாக இருக்கும். இது அசாம் பண்பாட்டையே காலி செய்து விடும். அசாமிய பண்பாட்டைப் பாதுகாப்பாது பாஜகவின் திட்டம்.

 • Share this:
  அசாமில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் ஊடுருவல் அதிகமாகிவிடும் என்று பேசியுள்ளார்.

  மேலும் திங்களன்று ‘வளர்ச்சியுடன் செல்ஃபி’ பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார் அமித் ஷா. காங்கிரஸ் ஏ.ஐ.யு.டி.எஃப். கூட்டணி அசாம் மக்களை காப்பாற்றாது என்றார் அவர். காங்கிரஸ் கட்சியினால் வாரிசு அரசியல் மட்டுமே சாத்தியம் என்றும் அவர் சாடினார்.

  அமித் ஷா பேசியதாவது:

  அசாமில் காங்கிரஸ் பத்ருதீன் அஜ்மல் மடியில் அமர்ந்து கொண்டிருக்கிறது. கேரளாவில் முஸ்லிம் லீகுடன் கைகோர்ப்பு. ஃபுர்புர ஷரீபுடன் பெங்காலில் கூட்டணி. இவர்கள் மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள். இது என்ன வகையான செக்யூலரிசம் என்று எனக்குப் புரியவில்லை.

  இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வெளிநாட்டிலிருந்து ஊடுருவல் அதிகமாக இருக்கும். இது அசாம் பண்பாட்டையே காலி செய்து விடும். அசாமிய பண்பாட்டைப் பாதுகாப்பாது பாஜகவின் திட்டம்.

  அசாம் மாநிலம், இயக்கங்கங்கள், வன்முறைகள், கலவரங்கள், ஊடுருவல், தீவிரவாதம் ஆகிய பிரச்னைகளை கடந்த காலத்தில் சந்தித்துள்ளது. இதில் பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அசாமைக் காப்பாற்றுவோம் என்று கூறுபவர்களால் ஊடுருவலைத் தடுக்க முடியுமா? அசாமின் பாரம்பரியம், பண்பாடு, அடையாளத்தை உங்களால் காக்க முடியுமா?

  முன்பெல்லாம் அசாமில் ஊழல்களுக்கு எல்லையே இல்லாமல் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகளால் ஊழல் குற்றச்சாட்டினை வைக்க முடியுமா? 5 ஆண்டுகளில் அசாமை வளர்ச்சியின் பாதையில் பாஜக திருப்பியுள்ளது. அஸாமில் ஊடுருவல் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளோம், இப்போது இங்கு ஊடுருபவர்கள் ஒருமுறை அல்ல பலமுறை யோசிப்பார்கள்.

  மோடியின் ஆட்சியில் அமைதிப்பூங்காவாகி உள்ளது அசாம். அசாமில் பாஜக 5 தூண்களின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறது. பாதுகாப்பு, மரியாதை, பண்பாடு, நாகரீகம், வளமை மற்றும் தொடர்பு, அமைதி மற்றும் உரையாடல் மற்றும் தற்சார்பு இந்த கொள்கைகளின் கீழ் அசாமை உச்சத்திற்கு கொண்டு செல்வோம்.

  இவ்வாறு பேசினார் அமித் ஷா.

  மேலும் ‘செல்ஃபி வித் டெவலப்மெண்ட்’ என்ற சோஷியல் மீடியா பிரச்சாரத்தையும் இந்த தேர்தலுக்காக அமித் ஷா அசாமில் தொடங்கி வைத்துள்ளார்.  சோஷியல் மீடியா செயல்பாட்டாளர்களுடன் பேசிய அமித் ஷா, காங்கிரஸ், அஜ்மல் கூட்டணி அசாமை காப்பாற்ற முடியாது என்றார்.
  Published by:Muthukumar
  First published: