• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • பெரியாருக்கு பதில் மோடியை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டதா அ.தி.மு.க - ப.சிதம்பரம் கேள்வி

பெரியாருக்கு பதில் மோடியை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டதா அ.தி.மு.க - ப.சிதம்பரம் கேள்வி

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணாதான்.

  • Share this:
    பெரியாரின் கொள்கையை ஒழிக்கவே பாரதிய ஜனதா கட்சி தமிழகத்துக்கு வந்திருப்பதாக பெங்களூரு எம்.பியும் பா.ஜ.க தலைவர்களில் ஒருவருமான தேஜஸ்வி சூர்யா பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் தேஜஸ்வியின் இந்த பேச்சை வன்மையான கண்டிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டரில் இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், “தமிழ்நாட்டில் ‘பெரியாரிசம்’ (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பா.ஜ.க இங்கு வந்திருக்கிறது என்று பா.ஜ.க தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். ‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார்.

    தமிழ் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார். காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணாதான். ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அ.இ.அ.தி.மு.க, பா.ஜ.க தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை. தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா” என கேள்வி எழுப்பியுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: