5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின் புதிய தலைர் தேர்வு.. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின் புதிய தலைர் தேர்வு.. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

சோனியா - ராகுல்

சோனியா காந்தியின் விசுவாசமிக்க தலைவர்கள், கட்சிக்குள் கலகக் குரல் எழுப்புவோரை பெயர் குறிப்பிடாமல் சாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் மாதம் நடத்தப்படும் வரையில் சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராக நீடிப்பார் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் உட்சபட்ச அதிகாரம் கொண்ட குழுவான காரியக் கமிட்டி கூட்டம், இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் மற்றும் கேரளா மாநில சட்டமன்ற தேர்தல்கள் விரைவில் நடக்க இருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் மாதம் வரையில் ஒத்திவைப்பதாகவும், ஜூன் மாதத்தில் புதிய தலைவரை தேர்வு செய்யலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. முன்னதாக மே மாதத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள் மே மாதத்தில் வெளியாகும் என்பதால் ஜூன் மாதத்தில் காங். தலைவர் தேர்வு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

அதே நேரத்தில் இக்கூட்டத்தில் இரு பிரிவினரிடையே வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது, அதனை கே.சி.வேணுகோபால் மறுத்தார்.

ப.சிதம்பரம். குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், ஆனந்த் சர்மா போன்ற மூத்த தலைவர்கள் உட்கட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என கோரியதாகவும், அதற்கு காந்தி குடுப்பத்தின் விசுவாசிகளான அசோக் கெலாட், அமரீந்தர் சிங் மற்றும் ஏ.கே.அந்தோனி ஆகியோர் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் நடத்தலாம் என கூறியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சோனியா காந்தியின் விசுவாசமிக்க தலைவர்கள், கட்சிக்குள் கலகக் குரல் எழுப்புவோரை பெயர் குறிப்பிடாமல் சாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாம் பாஜகவுக்கு எதிராக தேர்தல்களை எப்படி சந்திப்பது என்று தான் பேச வேண்டும், உட்கட்சி தேர்தல், கட்சி நடத்துவது, கட்சி விவகாரங்கள் குறித்து கட்சியின் தலைவர் பார்த்துக்கொள்வார் என அத்தலைவர்கள் சாடியதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் முன்னர் சோனியா காந்திக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து கடிதம் எழுதியதையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து கடந்த ஆகஸ்டில் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: