Home /News /politics /

16-ம் தேதி நடைபெறுகிறது காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

16-ம் தேதி நடைபெறுகிறது காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் 16-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், முக்கிய அரசியல் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

கூட்டத்தில் கர்நாடகா இடைத்தேர்தல், மகாராஷ்டிராவின் அரசியல் சூழல், ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Congress

அடுத்த செய்தி