• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • கூட்டணி குறித்து கமலுடன் பேசி வருவது உண்மையா? காங்கிரஸ் தரப்பு விளக்கம்

கூட்டணி குறித்து கமலுடன் பேசி வருவது உண்மையா? காங்கிரஸ் தரப்பு விளக்கம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

தினேஷ் குண்டுராவ், கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் கூறினார்.

  • Share this:
    காங்கிரஸ் கட்சி மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விளக்கமளித்துள்ளார்.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது. இதனிடையே, தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    அப்போது 30 தொகுதிகளுக்கும் மேல் கேட்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், 22 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் கூறினார்.

    மேலும். ராகுல் காந்தி பரப்புரை குறித்து குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாது என நம்புகிறோம்  பரப்புரையில் எந்த அத்துமீறலும் நடைபெறவில்லை.  ராகுல் காந்திக்கு கிடைக்கும் வரவேற்பை பா.ஜ.க வால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தொகுதி பங்கீடு குறித்து கட்சி அளவில் அனைவருடனும் ஆலோசித்து வருகிறோம். விரைவில் கூட்டணி இறுதி செய்யப்படும் நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டணியின் இறுதி முடிவு எட்டப்படும்.  தேர்தல கூட்டணி குறித்து கமல் உடன் பேசி வருவது வதந்தி எனக் கூறி அந்த தகவலை மறுத்துள்ளார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: