திரிபுரா : காங்கிரஸ் தலைவர் சென்ற கார் மீது தாக்குதல் - பா.ஜ.க மீது குற்றச்சாட்டு?

Pijush Biswas

திரிபுரா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவரான பிஜூஷ் பிஸ்வாஸ் இன்று காலை வாகனத்தில் செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  திரிபுரா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவரான பிஜூஷ் பிஸ்வாஸ் இன்று காலை வாகனத்தில் செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பிஸ்வாஸ் லேசாக காயம் அடைந்ததாகவும் அவர் சென்ற வாகனம் அதிகளவில் சேதம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  திரிபுராவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக அம்மாநிலத்தின் எதிர்கட்சி ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். தாக்குதல் தொடர்பாக என்.டி.டி.வி-யிடம் பேசிய திரிபுரா காங்கிரஸ் தலைவர் பிஸ்வாஸ், தலைநகர் அகர்தலாவில் இருந்து காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள இஷல்கர் பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் வழியில் அலுவலகத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் இந்த சம்பவம் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

  தாக்குதல் நடந்தப்பட்ட வாகனத்தின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் சென்ற காரின் கண்ணாடிகள் விரிசல் அடைந்தும் பக்கவாட்டில் இருக்கும் கண்ணாடிகள் உடைந்தும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக பிஸ்வாஸ் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், இந்த தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை.

  கடந்த 2019-ம் ஆண்டு திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட பிஸ்வாஸ், அக்கட்சி ஆட்சிக்கு வர கடுமையாக உழைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டதும் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Published by:Ram Sankar
  First published: