சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க.. போலீசிடம் காங்கிரஸ் மனு

சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க.. போலீசிடம் காங்கிரஸ் மனு
சீமான்
  • Share this:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தி பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்யக் கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் கடந்த சனிக்கிழமை பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தியதோடு, பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளையும் தெரிவித்தார்.

சீமானின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ்காந்தி படுகொலையை நியாயப்படுத்தி, வன்முறையை தூண்டி, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசிய சீமானை தேசத் துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், நாம் தமிழர் கட்சிக்கான அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ள கே.எஸ். அழகிரி, இது தொடர்பாக காவல்துறையிடமும், தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரிடம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.Watch Also:

First published: October 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading