கொங்கு மண்டலத்துக்கு நான் விருந்தாளியா? - கமல் பேச்சால் வானதி சீனிவாசன் காட்டம்

கொங்கு மண்டலத்துக்கு நான் விருந்தாளியா? - கமல் பேச்சால் வானதி சீனிவாசன் காட்டம்

வானதி ஸ்ரீனிவாசன்

இந்த ஊர்கார்ர்களிடம் நான் எங்கு பிறந்தேன், வளர்ந்தேன, என் குடும்பம் எங்கு இருக்கின்றது என கமல் விசாரித்து தெரிந்து கொள்ளட்டும்

 • Share this:
  கொங்கு மண்டலத்துடன் என்னுடய தொடர்பை பிரித்து காட்ட கமல் முயன்றால் நிச்சயம் அதில் தோல்வியடைவார் என பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கமல்ஹாசனும், வானதியும் மோதுவதால் இந்தத் தொகுதி அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இதற்கிடையில், தேர்தல் முடிந்தால் கமல் சென்னைக்கு சென்றுவிடுவார் என்று பா.ஜ.க, காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டது.

  இந்தநிலையில், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கெம்பட்டி காலனியில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதிக்கு நான் விருந்தாளி என கமலஹாசன் சொல்லியிருக்கின்றார். அவரை சுற்றியுள்ள இந்த ஊர்காரர்களிடம் நான் எங்கு பிறந்தேன், வளர்ந்தேன, என் குடும்பம் எங்கு இருக்கின்றது என கமல் விசாரித்து தெரிந்து கொள்ளட்டும். கொங்கு மண்டலத்துடன் என்னுடய தொடர்பை பிரித்து காட்ட கமல் முயன்றால் நிச்சயம் அதில் தோல்வியடைவார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

  செய்தியாளர்: குருசாமி


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: