முதல்வர் பழனிசாமிக்கு தொண்டையில் புண்

முதல்வர் பழனிசாமிக்கு தொண்டையில் புண்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

போலியோ சொட்டு மருந்து முகாமை இன்று தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி மதுரையில் நடைபெற்ற முத்தரையர்கள் சங்க மாநாட்டில் கலந்து கொண்டார்.

 • Share this:
  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தீவர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையை பல மாவட்டங்களில் மேற்கொண்டு வருகிறார்.

  முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் உற்சாக வரவேற்பு வழங்கபட்டு வருகிறது. போலியோ சொட்டு மருந்து முகாமை இன்று தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி மதுரையில் நடைபெற்ற முத்தரையர்கள் சங்க மாநாட்டில் கலந்து கொண்டார்.

  முத்தரையர்கள் சங்க மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முதல்வரை அழைத்தபோது தனக்கு பேசிப்பேசி தொண்டையில் புண் வந்துவிட்டதாகவும் தொண்டையில் வலி இருப்பதாலும் பேச முடியவில்லை என்றார். மேலும் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் என்று கூறி விட்டுச் சென்றார்.
  Published by:Vijay R
  First published: