உண்மையை கூறி வாக்கு சேகரித்தால் எதிர்க்கட்சி பதவியாவது மிஞ்சும் - திமுகவை விமர்சித்த முதல்வர் பழனிசாமி

உண்மையை கூறி வாக்கு சேகரித்தால் எதிர்க்கட்சி பதவியாவது மிஞ்சும் - திமுகவை விமர்சித்த முதல்வர் பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

உண்மையை கூறி வாக்கு கேட்டால் திமுகவுக்கு எதிர்க்கட்சி பதவியாவது மிஞ்சும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

 • Share this:
  சென்னை மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெஞ்சமின், பூந்தமல்லி தொகுதி பாமக வேட்பாளர் ராஜமன்னார் ஆகியோரை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை முகப்பேர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

  தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தமிழக அரசு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பச்சைப்பொய் பேசுவதாகவும், வரும் தேர்தலுடன் திமுக காணாமல் போய்விடும் எனவும் விமர்சித்தார். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, மகன் ஸ்டாலினை நம்பியது இல்லை என்றும் கூறினார். அதிமுகவில் சாதாரண தொண்டன் உண்மையாக உழைத்தால் எம்எல்ஏ, எம்பியாக ஆகலாம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

  முன்னதாக, ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்புவுக்கு, ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். சுதந்திர தின பூங்கா அருகே திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு வாக்கு சேகரித்த முதலமைச்சர், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரு இணக்கமான உறவு இருந்தால் தான் மாநிலம் வளர்ச்சி பெறும் என்றார். தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றால் குஷ்பு வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

  அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி போட்டியிடும் கசாலியை ஆதரித்து, ஐஸ்ஹவுஸ் பகுதியில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார். திமுக ஆட்சியில் சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், மழை காலத்தில் தேங்கும் நீரை வெளியேற்றவும் உரிய திட்டங்களை செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.

  அதிமுக ஆட்சியில் 954 கிலோ மீட்டர் தொலைவிற்கு மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டதாகவும் சென்னையில் 3 ஆயிரம் இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், தற்போது 33 இடங்களில் மட்டுமே நீர் குடும்ப கட்சியாக தேங்குவதாகவும் தெரிவித்தார். திமுக மாறிவிட்டதால், அந்த கட்சிக்காக உழைக்கும் உண்மை தொண்டர்கள் வீதியில் தான் இருக்க வேண்டும் என்றும் விமர்சித்தார்.

   
  Published by:Vijay R
  First published: