• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • ஜெகன் மோகன் ரெட்டி இந்துக்களுக்கு துரோகம் செய்கிறார், அவர் கிறித்துவராக இருக்கலாம்: சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு

ஜெகன் மோகன் ரெட்டி இந்துக்களுக்கு துரோகம் செய்கிறார், அவர் கிறித்துவராக இருக்கலாம்: சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு

ஜெகன் மோகன், நாயுடு.| கோப்புப் படம்.

ஜெகன் மோகன், நாயுடு.| கோப்புப் படம்.

அயோத்தியில் ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன, அதேபோல்தான் ராமதீர்த்தம் ராமர் கோயில் இங்கு புண்ணியஸ்தலமாகும். ஆனால் இங்கு விஷமிகள் ராமர் சிலையை சிதிலமாக்குகின்றனர்.

  • Share this:
    ஆந்திராவில் இந்துக் கோயில்கள் சேதப்படுத்தப்படுகிறது, இந்து விக்ரகங்கள் இழிவுபடுத்தப்படுகிறது இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஜெகன் மோகன் ரெட்டி பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாகச் சாடியுள்ளார்.

    விஜயநகரம் மாவட்டத்தில், 400 ஆண்டுகள் பழமையான, ராமதீர்த்தம் கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலில் உள்ள ராமர் சிலையை, விஷமிகள் சிலர், சமீபத்தில் சேதப்படுத்தினர். இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ராமதீர்த்தம் கோவிலுக்கு, தன் தொண்டர்களுடன் நேற்று முன் தினம் சென்றார். கோவில் பூட்டப்பட்டு இருந்ததால், பணியாளர்களிடம், சேதம் குறித்து கேட்டறிந்தார்.

    “ஜெகன் மோகன் கிறித்துவராக இருக்கலாம். ஆனால் அதிகாரத்தைப் பயன்படுத்தி மதமாற்றச் சக்திகளுக்குத் துணை போவதா? மதமாற்றத்துக்கு ஆட்சியிலிருப்பவர்கள் உதவினால் அது இந்துக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

    கடந்த, 18 மாதங்களில், ஆந்திரா முழுதும் உள்ள, 127 கோவில்கள் மற்றும் சுவாமி சிலைகள், விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஹிந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன. இதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

    அயோத்தியில் ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன, அதேபோல்தான் ராமதீர்த்தம் ராமர் கோயில் இங்கு புண்ணியஸ்தலமாகும். ஆனால் இங்கு விஷமிகள் ராமர் சிலையை சிதிலமாக்குகின்றனர். ஆனால் விஷமிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

    ராஜமுந்திரியிலும் சுப்பிரமணியக் கடவுள் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

    ஆனால் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க தெலுங்கு தேசம் கட்சியும் சந்திரபாபு நாயுடுவும் அவரது மகன் லோகேஷ் ஆகியோரது ஆதரவாளர்கள் கோவிலில் தாக்குதலில் ஈடுபடுவதாக ஜெகன் மோகன் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: