திமுக பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட கட்சி! - முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

திமுக பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட கட்சி! - முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

``விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சி அதிமுக. நீண்டகால பிரச்சினையான காவிரி நதி நீர்ப் பிரச்சனையை தீர்க்க கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.

  • Share this:
    தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தீவிரமான பிரசாரங்களில் ஈடுபட்டு எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்து தங்களது ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களிடம் கூறி வருகின்றனர். அவ்வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூம்புகார் தொகுதியில் மக்களிடம் பிரசாரம் செய்தார். அப்போது, திமுக பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட கட்சி என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

    பூம்புகார் தொகுதியில் பேசிய முதல்வர், ``விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சி அதிமுக. நீண்டகால பிரச்சினையான காவிரி நதி நீர்ப் பிரச்சனையை தீர்க்க கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம். அதன் பின்னர் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சமே இருக்காது. தண்ணீர் தேவைகளுக்காக அண்டை மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை இருக்காது. நீர் மேலாண்மையில் 2019 - 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தேசிய அளவில் விருது பெற்றுள்ளது. உணவு தானிய உற்பத்தி, போக்குவரத்து, கல்வி, சமூக நலத்துறை, உள்ளாட்சித் துறை என பல்வேறு துறைகளில் தமிழக அரசு தேசிய விருது பெற்று முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.

    தமிழகத்தில் கடும் மின்வெட்டு இருந்த நிலையில், 2011ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஜெயலலிதா மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து நிறைவேற்றிக் காட்டினார். அவரது வழியில் தற்போது செயல்பட்டு வரும் அரசு தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி உள்ளது. இந்தியாவிலேயே தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. 304 தொழிற்சாலைகள் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு அதன் மூலம் 5.5 லட்சம் இளைஞர்களுக்கு நேரடியாகவும் 5 லட்சம் இளைஞர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

    திமுக பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட கட்சி. அதனால்தான் அவர் தற்போது மனுக்களை வாங்குவதற்கு பெட்டிகளை எடுத்துச் செல்கிறார். ஏற்கனவே 2019-ல் வாங்கிய மனுக்களை மு க ஸ்டாலின் என்ன செய்தார். அதிமுக ஆட்சியில் மக்களிடம் மனுக்களை வாங்கி ஏமாற்றியவர் மு.க.ஸ்டாலின். தற்போதும் அந்த வித்தையை அவர் மக்களிடம் காட்டுகிறார். ஆனால் இந்த முறை அது எடுபடாது. விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய அனைத்து கடன்களையும் அதிமுக அரசு தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்களையும் வழங்கி விட்டது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் விவசாய கடன்களை ரத்து செய்வதாக ஸ்டாலின் ஏமாற்றுகிறார்.

    மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள நகைக்கடன் சுய உதவி குழு கடன் ஆகியன தள்ளுபடி செய்யப்படும். இலவச கேபிள் இணைப்பு, வாஷிங் மெஷின் ஆகியன வழங்கப்படும். முதியோர் உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வினியோகிக்கப்படும். அனைத்து மதக் கோயில்களும் புனரமைக்கப்படும். மீன் பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் தொகை, டீசல் மானியம் உயர்த்தி வழங்கப்படும். அனைத்து ஏழை மக்களுக்கும் அரசு சொந்தமாக நிலம் வாங்கி கான்கிரீட் வீடு புதிதாக கட்டித் தரப்படும்” என்றார்.
    Published by:Ram Sankar
    First published: