டெல்லி புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. பிரதமரை சந்தித்து மனு அளிக்க திட்டம்

டெல்லி புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. பிரதமரை சந்தித்து மனு அளிக்க திட்டம்
முதல்வர் பழனிசாமி
  • Share this:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க திட்டமிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டங்கள் குறித்து முடிவுசெய்ய மாநில முதலமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் கூட்டம், டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.

பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மகாத்மா காந்தியின் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்துக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷா-வையும் சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.


அப்போது, தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று இரவு சென்னை திரும்ப அவர் திட்டமிட்டுள்ளார்.
First published: December 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading