ஸ்டாலின் வேல் ஏந்துவது பகல் வேடம்... முதல்வர் பழனிசாமி விமர்சனம்

ஸ்டாலின் வேல் ஏந்துவது பகல் வேடம்... முதல்வர் பழனிசாமி விமர்சனம்

முதல்வர் பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலினை குறிப்பிட்டு, கடவுளை இழிவாக பேசியவர் கையில், கடவுள் வேல் கொடுத்து இருக்கிறார்கள் என்றார்.

 • Share this:
  திமுக தலைவர் ஸ்டாலின் கையில் வேல் ஏந்துவது பகல் வேடமென்றும், முருகன் வரம் தர மாட்டார் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

  தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்களின் தேர்தல் பரபரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான என பலரும் தீவரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

  மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுகவினர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேலை பரிசாக அளித்தனர். மு.க.ஸ்டாலின் வேல் உடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதனை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

  புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர், கோவையில் 2-வது நாள் பரப்புரையை முதல்வர் பழனிசாமி தொடங்கினார். திறந்தவெளி வேனில் உரையாற்றிய முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலினை குறிப்பிட்டு, கடவுளை இழிவாக பேசியவர் கையில், கடவுள் வேல் கொடுத்து இருக்கிறார்கள் என்றார். முருகனின் வரம், அதிமுகவிற்குதான் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

  திமுக தலைவர் ஸ்டாலின் வேல் ஏந்தியதால், பாஜகவின் வெற்றி வேல் யாத்திரை வெற்றி பெற்றுள்ளதாக, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வரும் 6ம் தேதி சேலம் கெஜ்ஜல் நாய்க்கன்பட்டியில் நடைபெற உள்ள பாஜக இளைஞர் அணி மாநாட்டிற்கான, கால்கோள் நடும் விழாவில் பங்கேற்ற பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: