ஒரே மேடையில் துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயார் - மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி சவால்

ஒரே மேடையில் துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயார் - மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி சவால்

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

பல்வேறு சமயங்களில் ஸ்டாலினை விவாதத்திற்கு அழைத்தும் ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை.

 • Share this:
  திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயார்' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

  இந்தியா டுடே குழுமம் நடத்திய கருத்தரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த சவாலை விடுத்திருக்கிறார். தேர்தல் பிரசார மேடைகளில் அதிமுக மீது ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுக்கள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கலாமா? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், நீதிமன்றத்தில் உள்ள அவதூறு வழக்கை வாபஸ் பெற்றால் விவாதத்திற்கு தயார் என பதிலளித்தார்.

  இதற்கு பின்னர் பல்வேறு சமயங்களில் ஸ்டாலினை விவாதத்திற்கு அழைத்தும் ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் இந்தியா டுடே குழுமம் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரே மேடையில் ஸ்டாலினுடன் விவாதிக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.

  அதே கருத்தரங்கில் நாளை கலந்து கொள்ளவிருக்கும் ஸ்டாலினிடம் முதலமைச்சர் விவாதத்திற்கு அழைத்தது குறித்து, முன் வைக்கப்படும் என இந்தியா டுடே தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் ராகுல் கன்வால் தெரிவித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: