ஹோம் /நியூஸ் /அரசியல் /

தமிழகத்தில் மிகப்பெரிய எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்துள்ளது அதிமுக அரசு - முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் மிகப்பெரிய எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்துள்ளது அதிமுக அரசு - முதல்வர் பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் மிகப்பெரிய எய்ம்ஸ் மருத்துவமனையை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் ஸ்டாலின் இதை குறை கூறுகிறார் என்று முதல்வர் குற்றம்சாட்டி உள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வாக்கு கேட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செக்கானூரணி பகுதியில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது, முக.ஸ்டாலின் செல்லும் இடங்களெல்லாம் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் மிகப்பெரிய எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்துள்ளது அதிமுக அரசு.

  திருமங்கலம் நகரில் போக்குவர்த்து நெரிசலை தடுக்க புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். எவ்வளவோ செய்துள்ள அதிமுகவின் திட்டங்கள் முக ஸ்டாலின் கண்களுக்கு தெரிவதில்லை. அதிமுக அரசு ஊழல் செய்வதாக தவறான அறிக்கையை வெளியிட்டு வருகிறார் முக ஸ்டாலின்.

  பாரத நெட் திட்டத்தில் இதுவரை டெண்டரே விடப்படாத நிலையில் ஊழல் நடந்துள்ளதாக முக ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டு முன்வைத்து வருகிறார். பொய்யை மூலதனமாக கொண்டு அரசியல் நடத்துபவர் முக.ஸ்டாலின். ஏப்ரல் 1ம் தேதி முதல் 24மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் 6 சவரனுக்கு குறைவான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: ADMK, DMK, Tirumangalam Constituency, TN Assembly Election 2021