₹400 கோடி மதிப்பீட்டில் வாழை நாரிலிருந்து துணி, பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலை - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

₹400 கோடி மதிப்பீட்டில் வாழை நாரிலிருந்து துணி, பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலை - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை இந்த திட்டம் தொடர்பாக தன்னிடம் விரிவாக எடுத்துரைத்தார் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

 • Share this:
  மேட்டுப்பாளையத்தில் வாழை நாரில் இருந்து துணி, பிஸ்கட், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை 400 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

  சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு 2-வது நாள் பரப்புரையை தொடங்கினார். சிங்காநல்லூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், ராணுவ உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்கூடத்தை கோவையில் தொடங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியிருப்பதாகக் கூறினார்.

  மேட்டுப்பாளையத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, வாழை நாரில் இருந்து துணி, பிஸ்கட், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை 400 கோடி மதிப்பில் செயல்படுத்த உள்ளதாகவும், இதன்மூலம் வாழை விவசாயிகள் பயன்பெற முடியும் என்றும் கூறினார். இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை இந்த திட்டம் தொடர்பாக தன்னிடம் விரிவாக எடுத்துரைத்தார் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

  இதை தொடர்ந்து பீளமேடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பின்னர் கரியாம்பாளையம் சென்று அங்குள்ள பட்டத்தரசியம்மன் கோயிலில் வழிபாடு செய்தார். மேலும், அதிமுக தொண்டர் மலரவன் வீட்டில் தேனீர் அருந்தினார். அதையடுத்து அன்னூரில் பரப்புரை செய்த அவர், வீடு இல்லாத மக்களுக்கு காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்றும் தமிழகத்தில் ஏழை என்ற சொல் எதிர்காலத்தில் இருக்காது என்றும் கூறினார். நீட் தேர்வை வைத்து திமுக பொய் சொல்லி வருவதாகவும் முதலமைச்சர் சாடினார். பரப்புரையின்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு அதிமுக தொண்டர்களை முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
  Published by:Vijay R
  First published: