மோடி வேட்டி கட்டியது அதிமுக வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு - பாஜகவின் கே.டி ராகவன்

"திமுக கூட்டணியின் தவறான பொய் பிராசாரத்தை மக்கள் உணர்ந்து கொண்டதால் திமுக கூட்டணி வெல்ல முடியவில்லை"

மோடி வேட்டி கட்டியது அதிமுக வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு - பாஜகவின் கே.டி ராகவன்
கே.டி ராகவன்
  • News18
  • Last Updated: October 24, 2019, 4:11 PM IST
  • Share this:
பிரதமர் மோடி சீன அதிபர் சந்திப்பு தமிழகத்தில் நடத்தப்பட்டது தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து சீன அதிபரை மோடி வரவேற்றார் இந்த சந்திப்பும் தமிழக இடைத்தேர்தலில் அதிமுக வெற்றியில் தாக்கத்தை ஏற்ப்படுத்தியிருக்க வாய்ப்பு உண்டு என பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கே.டி ராகவன் சென்னை கமலாலயத்தில் பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவர் ”தமிழ் மொழி,தமிழ் கலாச்சார பாரம்பரியத்தை பிரதமர் மோடி பல சந்தர்பங்களில் உலகறியச் செய்திருக்கிறார்.

கடந்த நாடளுமன்ற தேர்தலில் தவறான பொய் பிராசாரத்தை மேற்கொண்டு தமிழகத்தில் வெற்றிப்பெற்ற திமுக காங்கிரஸ் கூட்டணியால் இடைத்தேர்தலில் வெல்ல முடியவில்லை. திமுக கூட்டணியின் தவறான பொய் பிராசாரத்தை மக்கள் உணர்ந்து கொண்டதால் திமுக கூட்டணி வெல்ல முடியவில்லை “ என்று கூறியுள்ளார்.


அதிமுக பணத்தை கொடுத்து இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக கே.எஸ்.அழகிரியின் கருத்து குறித்து பதிலளித்த ராகவன் ”புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றி பணத்தால் கிடைத்த வெற்றியா என்பதை கே.எஸ் .அழகரி தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்

மேலும் அவர் “அரியானாவில் ,கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் பா.ஜ.க ஓட்டு சதவிகிதம் குறைந்துள்ளது இதுகுறித்து கட்சி ஆய்வு செய்யும்” என்று கூறினார்.

பார்க்க : 
First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading