என் வழி, தனி வழி... வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்

என் வழி, தனி வழி... வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்

அதிமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை லாரியில் ஊர்வலமாக எடுத்து சென்று பூந்தமல்லி தொகுதி பாமக வேட்பாளர் ராஜமன்னர் வாக்கு சேகரித்தார்.

  • Share this:
பூந்தமல்லி தனிசட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பில் ராஜமன்னார் போட்டியிடுகிறார். இந்த நிலையில் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பூந்தமல்லி ட்ரங்க் சாலை, ருக்மணி நகர், லட்சுமிபுரம் சாலை ஆகிய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணியுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள், வாஷிங் மெஷின், அம்மா ஸ்கூட்டர் ஆகியவற்றை கொடுப்பதாக அறிவித்துள்ள நிலையில் அதனை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் சென்று விளக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட லாரி  வாகனத்தில் இவை அனைத்தையும் பொதுமக்களின் பார்வைக்கு வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் அதிமுக அரசு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்த பதாகைகளை பெண்கள் கையில் பிடித்தவாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது...
Published by:Vijay R
First published: