• HOME
 • »
 • NEWS
 • »
 • politics
 • »
 • தெலுங்கு தேசத்தை உடைத்து ஆந்திராவில் காலூன்ற பாஜக தீவிர முயற்சி: சந்திரபாபு நாயுடு கையிலெடுக்கும் அரசியல் உத்தி

தெலுங்கு தேசத்தை உடைத்து ஆந்திராவில் காலூன்ற பாஜக தீவிர முயற்சி: சந்திரபாபு நாயுடு கையிலெடுக்கும் அரசியல் உத்தி

சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசத்தின் இத்தகைய நகர்த்தலை முறியடிக்க பாஜக அங்கு ராமதீர்த்தத்திலிருந்து ரத யாத்திரைக்கு அறிவித்துள்ளது. ராமதீர்த்தம் அரசியல் மையமானதற்குக் காரணம் அங்கு 400 ஆண்டுகால பழைமை ராமர் சிலை சேதப்படுத்தப்பட்டதே.

 • Share this:


  2019 சட்டப்பேரவைத் தேர்தல், லோக்சபா தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு தலைமை தெலுங்கு தேசம் கட்சி, அங்கு பாஜக காலூன்ற மேற்கொண்டு வரும் முயற்சிகளை தங்களுக்குச் சாதகமாக்கி இந்துத்துவா அரசியலை முன்னெடுத்து வருவதாக ஆந்திர அரசியலை உற்று நோக்கும் அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  இந்துக் கோயில்கள் தாக்கப்படுவதும் தெய்வ விக்கிரகங்கள் சேதப்படுத்தப்படுவதும் நடந்து வரும் சூழலை தெலுங்கு தேசம் தன் கைவசம் எடுத்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான ஒரு உத்தியை வகுத்து வருகிறது. மேலும் பாஜக ஆந்திராவில் உறுப்பினர் சேர்க்கை வேட்டையைத் தொடங்கியதும், தெலுங்கு தேசத்தின் இந்த இந்துத்துவா திருப்பத்துக்குக் காரணம் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

  தெலுங்கானாவில் கொஞ்சம் வெற்றியை ருசித்த பாஜக ஆந்திராவிலும் காலூன்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு திருப்பதி லோக்சபா இடைத்தேர்தலை நிலைக்களனாக பாஜக கொண்டுள்ளது.

  அரசியல் ஆய்வாளரும் பேராசிரியருமான கே.நாகேஸ்வர ராவ் என்பவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குக் கூறும்போது, “சந்திரபாபு நாயுடு தன் கட்சியை ஒருங்கிணைக்க பாஜக அரசியலை தன் கையில் எடுத்துள்ளார். தெலுங்கானாவில் பாஜகவின் சக்சஸை அடுத்து சந்திரபாபு நாயுடு இந்துத்துவா அரசியலை கையில் எடுத்துள்ளார். பாஜக தனது இந்துத்துவ அரசியலை தீவிரப்படுத்தினால் தெலுங்கு தேசம் கட்சியில் உள்ள ஆதரவாளர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பது சுலபம், ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்களை ஈர்பது கடினம்.

  இதை வெற்றிகரமாக பாஜக செய்து விட்டால், அங்கு தெலுங்கு தேசம் கட்சிக்கு சிக்கல்தான். அதனால் சந்திரபாபு நாயுடு பாஜக அரசியலை தன் கைவசம் எடுத்துள்ளார்” என்றார்.

  சமீபத்தில் கூட கோயில் விக்கிரகங்கள் தாக்கப்படுகின்றன ஜெகன் மோகன் ரெட்டி பேசாமல் இருக்கிறார், காரணம் அவர் ஒரு கிறித்துவர் என்று பேசியதையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்கின்றனர் ஆந்திர அரசியல் நோக்கர்கள்.

  தெலுங்கு தேசத்தின் இத்தகைய நகர்த்தலை முறியடிக்க பாஜக அங்கு ராமதீர்த்தத்திலிருந்து ரத யாத்திரைக்கு அறிவித்துள்ளது. ராமதீர்த்தம் அரசியல் மையமானதற்குக் காரணம் அங்கு 400 ஆண்டுகால பழைமை ராமர் சிலை சேதப்படுத்தப்பட்டதே.

  2014-ல் தெலுங்கு தேசம் தே.ஜ. கூட்டணியில் பாஜக 4 சட்டமன்ற தொகுதியிலும் 2 லோக்சபா தொகுதியிலும் வெற்றி பெற்றது. ஆனால் 2019-ல் ஜெகன் மோகன் கட்சி பெரு வெற்றியைப் பெற பாஜக ஒரு இடத்திலும் வெல்லாமல் போனது. வாக்கு விகிதமும் 0.84% ஆகச் சரிவு கண்டது. இது 2014-ல் 3% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

  பேராசிரியர் ராவ் மேலும் கூறும்போது, “ஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கு சரியான எதிரணி பாஜகதான் விரைவில் தெலுங்கு தேசத்தை அகற்றுவோம் என்று பாஜக கூறி வருகிறது, மேலும் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த செல்வாக்கான தெலுங்கு தேசத் தலைவர்களை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சிகளும் முடுக்கி விட்டப்பட்டுள்ளன” என்கிறார்.

  ஆனால், தெலுங்கு தேசக் கட்சியின் ஆந்திரத் தலைவர் கே.அச்சுதன் நாயுடு, இதை மறுத்தார். ஆந்திராவில் வேறு நிலை, தெலங்கானாவில் வேறு நிலை. தெலங்கானாவில் டிடிபி கட்சி வாக்குகள் பாஜகவுக்குச் சென்றது. அதை ஆந்திராவிலும் பாஜக செய்யப்பார்க்கிறது, ஆனால் இங்கு அது முடியாது. நாங்கள் இந்துக்களுக்காகப் போராடுகிறோம், பாஜகவுக்கு அஞ்சி அல்ல, என்றார்.


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: