`மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது!' - கமல்ஹாசன் காட்டம்

`மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது!' - கமல்ஹாசன் காட்டம்

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு குறித்து ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

 • Share this:
  பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்கட்சி தலைவர்கள் உட்பட பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். அவ்வகையில் தற்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு குறித்து ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

  கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.  எண்ணெய் நிறுவனங்கள் ஒரே மாதத்தில் சிலிண்டர் விலையை ரூபாய் 75 உயர்த்தியுள்ளதால் பொது மக்கள் தொடர்ந்து தங்களது கவலைகளை தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் பலரும் தங்களது கவலைகளை தெரிவித்து வருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ram Sankar
  First published: