Home /News /politics /

ஆ.ராசா மீது இருபிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

ஆ.ராசா மீது இருபிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

ஆ.ராசா

ஆ.ராசா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பற்றி அவதூறு பரப்பும் வகையில் அறுவருக்கத்தக்க கருத்துக்களை கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய ஆ.ராசா மீது இரு பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    சென்னை பரங்கி மலை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் அதிமுக வழக்கறிஞர் பிரிவில் மாநில இணை செயலாளராக உள்ளார். இவர் நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கடந்த 3 ஆம் தேதி திமுக எம்.பி ஆ.ராசா அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பற்றி அவதூறு பரப்பும் வகையில் அறுவருக்கத்தக்க கருத்துக்களை கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், அந்த புகாரில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லை எனவும், சசிகலாவின் தயவின் பேரில் பதவிக்கு வந்துள்ளதாகவும், அரசியல் சட்டத்தை படுகொலை செய்த ஜெயலலிதாவின் உருவ படத்தை வைத்து கொண்டு ஆட்சி நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஊழல் நிறைந்த கட்சி அதிமுகவில் ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்றவர் எனவும் 2ஜி ஊழல் பற்றி பேச தகுதியில்லை என ஆ.ராசா தெரிவித்திருந்தார்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது அவதூறு கருத்து தெரிவித்த ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

    இதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசா மீது 153-கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது,
    505/1( b)- தவறான தகவல், மற்றும் அவதூறு பரப்புதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published:

    Tags: A Raja

    அடுத்த செய்தி