மார்ச் 1-ம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் - கமல்ஹாசன் அறிவிப்பு

மார்ச் 1-ம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் - கமல்ஹாசன் அறிவிப்பு

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நாளை மறுதினம் தொடங்கும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது. பல கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க நேர்காணல்களை நடத்த திட்டமிட்டு வருகின்றன. அவ்வகையில், தற்போது மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நாளை மறுதினம் தொடங்கும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ``மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா தங்கள் கட்சியில் இணைவதாக தெரிவித்தார். மக்கள் நீதிமய்யம் சார்பில் அவர் தேர்தலில் போட்டியிடுவார்” என குறிப்பிட்டார். சட்ட பஞ்சாயத்து அமைப்பும் தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் மார்ச் 1-ம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் எனவும் கமல் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் கூட்டணிக்காக நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள மாட்டோம் எனவும் நல்லதிற்காக மட்டுமே நாங்கள் சமரசம் செய்து கொள்வோம் எனவும், முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு கமல் பதிலளித்தார்.

    முன்னதாக, கமல்ஹாசனை நேரில் சந்தித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மூன்றாவது அணியாக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியை வெற்றி பெறச் செய்வதற்கான பணிகளை தொடங்குவதே முதல் இலக்கு என்று கூறினார்.
    Published by:Ram Sankar
    First published: