சுவிஸ் வங்கியில் மு.க. ஸ்டாலின் கருப்புப்பணம் பதுக்கல் - முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

சுவிஸ் வங்கியில் மு.க. ஸ்டாலின் கருப்புப்பணம் பதுக்கல் -  முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
சுவிஸ் வங்கியில் கருப்புப்பணத்தை பதுக்கி வைத்திருப்பதாலேயே வெளிநாட்டுக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கடி செல்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரெட்டியார்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல் என்றார்.

எதிர்க்கட்சி வேட்பாளர் சென்னையில் வசித்து வருவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், நன்மை கிடைக்க கூடிய வேட்பாளர் வேண்டுமா அல்லது வெளியூர் வேட்பாளர் வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.


எதிர்கட்சி தலைவருக்கு இடைத்தேர்தல் வரும்போது தான் திண்ணை ஞாபகம் வருகிறது என்று சாடிய பழனிசாமி, மக்களிடம் மனுக்களை வாங்கி ஸ்டாலின் ஏமாற்றுவதாக விமர்சித்தார். வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப்பணம் பதுக்கியிருப்பவர்கள் பட்டியலில் திமுக-வினரும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

First published: October 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading